தீயணைப்பு வீரர்கள் விரைவில் அறிவார்ந்த மிகைப்படுத்தப்பட்ட மெய்நிகர் தலைக்கவசத்தைப் பயன்படுத்துவர்.
தீயணைப்புச் சாதனங்களை உடனடியாக அடையாளம் காணவும், காணாமல்போன பொருள்களையும் குறைகளையும் கண்டுபிடிக்கவும் அவை துணைபுரியும்.
செயல்பாட்டு நிலையங்களுக்கு உயர்தெளிவுக் காட்சிகளை அனுப்பக்கூடிய கையடக்கக் கணினிகளும் தீயணைப்பு வீரர்களுக்குக் கொடுக்கப்படும்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 5ஜி கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்நாட்டுப் பாதுகாப்பில் 5ஜி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதற்குத் தெளிவான உதாரணமாக இந்தத் தொழில்நுட்பம் அமைகிறது.
இந்தத் திட்டம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

