தெங்காவில் முதல் அக்கம்பக்க நிலையம் ஜூன் 28ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.
அதில் புதிய பேரங்காடி, உணவு நிலையம், விரைவு உணவகம் ஆகியவை உள்ளன.
பிளான்டேஷன் பிளாஸாவிலும், அதற்கு அருகில் உள்ள சில்லறை வர்த்தகப் பகுதி ஒன்றிலும் மொத்தம் 75 கடைகள் இருக்கும்.
முதற்கட்டமாக ‘ஜயன்ட்’ பேரங்காடி, ‘கோஃபு’ உணவு நிலையம், ‘மேக்டானல்ட்ஸ்’ விரைவு உணவகம் ஆகிய மூன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
10,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலையத்தில் ‘டாய்சோ’ கடையும் திறக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்கம்பக்க நிலையத்திற்கு ஜூன் 28ஆம் தேதி காலை சென்றிருந்த ஹொங் கா நார்த் நாடாளுமன்ற உறுப்பினர் ஏமி கோர், குடியிருப்பாளர்கள் அந்தப் புதிய பேட்டையில் அதிக வசதிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சருமான டாக்டர் கோர், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), பிளான்டேஷன் கிரேஞ்சிலும் பிளான்டேஷன் ஏக்கர்சிலும் உள்ள குடியிருப்பாளர்களுக்கு ‘ஃபேர்பிரைஸ்’ மளிகைப் பொருள் வண்டியையும் உணவு வழங்கும் இயந்திரங்களையும் கொண்டுவந்ததைக் குறிப்பிட்டார்.
எஞ்சியிருக்கும் கடைகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தெங்காவில் உள்ள முதல் பேருந்து சந்திப்பு நிலையமும் விரைவில் திறக்கப்படும் என்று டாக்டர் கோர் தெரிவித்தார்.
அதன் பிறகு புதிய பேருந்துச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தற்போதைய சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

