ஆர்க்கிட் தாவரப் பண்ணைகளுக்கான முதல் தவணைக் குத்தகைக் காலம் நீட்டிப்பு

1 mins read
90751ccd-f401-4898-a864-ccb26a809f2d
தேசியப் பூங்காக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் குத்தகை நிலங்கள் பெரும்பாலும் லிம் சூ காங், சுங்கை தெங்கா பகுதிகளில் அமைந்துள்ளன. - படம்: தேசியப் பூங்காக் கழகம்

நிலப்பகுதிகளுக்காக நவம்பர் மாதம் முதல் விண்ணப்பிக்கும் ஆர்க்கிட் தாவரப் பண்ணைகளுக்கும் நிலவனப்பு நிறுவனங்களுக்குமான முதல் தவணைக் குத்தகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பைத் திங்கட்கிழமை (அக்டோபர் 13) தேசியப் பூங்காக் கழகம் வெளியிட்டது.

தற்போது நிலப்பகுதி வேண்டி விண்ணப்பிப்போருக்கு முதலில் மூன்று ஆண்டுக்காலம் குத்தகை வழங்கப்படும், பின்னர் அதனை இருமுறை கூடுதலாக மூன்று ஆண்டுக்காலத்திற்குப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

அடுத்த மாதத்திலிருந்து, தேசியப் பூங்காக் கழகத்தால் குத்தகைக்கு விடப்பட்ட 1 ஹெக்டர் அளவிலான நிலங்களுக்கு முதலில் ஆறாண்டுக் காலத்திற்கும் பின்னர் கூடுதலாக மூவாண்டுக் காலத்திற்கும் குத்தகையை நீட்டிக்கலாம்.

தேசியப் பூங்காக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் குத்தகை நிலங்கள் பெரும்பாலும் லிம் சூ காங், சுங்கை தெங்கா பகுதிகளில் அமைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்