தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறை உள்ளவர்களுக்கு நீர் பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்

2 mins read
b378f8b6-1bce-4020-b86f-d5602de76679
பெரும்பாலான வகுப்புகள் நீச்சல் பாதுகாப்பு தொடர்புடையவை. அதில் நம்பிக்கையாக நீரில் இயங்குவது மற்றும் அடிப்படை நீச்சல் திறன்களை அறிந்துகொள்வதும் அடங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உடற்குறை உள்ளவர்கள் இலவசமாக நடத்தப்படும் நீர் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.

உடற்குறை உள்ளவர்கள் நீச்சல் உள்ளிட்ட நீர் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது விரைவில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தைச் சனிக்கிழமையன்று (அக்டோபர் 4) ஓசிபிசி வங்கியும் உடற்குறையுள்ளவர்களுக்கான சிங்கப்பூர் விளையாட்டு மன்றமும் இணைந்து திட்டத்தை அறிவித்தன.

இந்தத் திட்டத்தில் உடற்குறையுள்ள 100 பேர் கலந்துகொள்ளலாம், அவர்களுக்கு 800 இலவச வகுப்புகள் உள்ளன.

ஓசிபிசி-எஸ்டிஎஸ்சி ஸ்விம்டூகெதர் (OCBC-SDSC SwimTogether) திட்டம் ஓராண்டுக்கானது.

ஒவ்வொரு பங்கேற்பாளரும் மூன்று மாதத்தில் எட்டு நீச்சல் வகுப்புகளில் சேரலாம். ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று முதல் ஐந்து மாணவர்கள் இருப்பர்.

“உடற்குறை உள்ளவர்களுக்கு அடிப்படை நீச்சல் பாடத் திட்டங்கள் அவ்வளவாக இல்லை. அதற்கு முக்கிய காரணம் நிதி. போதுமான நிதி இருந்தால்தான் சரியான நீச்சல் பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு வர முடியும், மேலும் பங்கேற்பாளர்களுக்குத் தேவையான நீச்சல் சாதனங்கள், நீச்சல் குளங்கள், போக்குவரத்து போன்றவையும் அதிகச் செலவுகளைக் கொடுக்கும்,” என்று ஓசிபிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

“நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க ஓசிபிசி வங்கி 70,000 வெள்ளி நன்கொடையாக வழங்குகிறது. இதன்மூலம் நல்ல பயிற்றுவிப்பாளர்கள், நீச்சல் சாதனங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யமுடியும்,” என்று வங்கி குறிப்பிட்டது.

பெரும்பாலான வகுப்புகள் நீச்சல் பாதுகாப்பு தொடர்புடையவை. அவற்றில் நம்பிக்கையாக நீரில் இயங்குவது மற்றும் அடிப்படை நீச்சல் திறன்களை அறிந்துகொள்வது ஆகியன அடங்கும்.

உடற்குறைகளுக்கு ஏற்றவாறு வகுப்புகள் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீச்சல் கற்றுக்கொள்ள வருபவர்களுக்குச் சிறப்புச் சாதனங்களும் கொடுக்கப்படும். மிதக்கும் நீச்சல் அட்டைகள், நீச்சல் சட்டைகள் ஆகியவை வழங்கப்படும் என்று வகுப்பு ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்