தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈசூன் குளத்தில் இறந்துகிடந்த மீன்கள்: வீவக நடவடிக்கை

1 mins read
50df3d69-17e0-4c9e-8281-6553ee1f77a4
பிப்ரவரி இறுதிக்குள், மீன்கள் வர்த்தகப் பண்ணைக்கு இடமாற்றிவிடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஈசூனில் பயன்படுத்தப்படாத மீன் குளம் ஒன்றில் நீர் வற்றிய சம்பவம் குறித்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விசாரித்துவருகிறது. நீர் வற்றியதால் மீன்கள் இறந்தன.

அந்தப் பகுதியை கழகம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் நிர்வகிக்க தொடங்கியதிலிருந்து, இத்தகைய சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது.

குளத்தில் வழக்கத்திற்கு மாறான குறைந்த நீர் அளவு குறித்து பிப்ரவரி இரண்டாம் தேதி தகவல் கிடைத்ததாக கழகம் கூறியது.

“நாங்கள் மாண்ட மீன்களை அகற்றி, உயிருடன் உள்ள எஞ்சிய மீன்களை அதே பகுதியில் உள்ள வேறொரு குளத்திற்கு இடமாற்றிவிட்டோம்,” என்று கழகம் தெரிவித்தது.

பிப்ரவரி இறுதிக்குள், மீன்கள் வர்த்தகப் பண்ணை ஒன்றுக்கு இடமாற்றிவிடப்படும் என்று கழகம் கூறியது.

81, லோரோங் சென்சாருவில் உள்ள அந்தக் குளத்தில் கிட்டத்தட்ட நூறு மீன்கள் இறந்துகிடந்தன. அதனால் வந்த துர்நாற்றத்திலிருந்து குடியிருப்பாளர்களும் பொதுப் போக்குவரத்துப் பயணிகளும் புகார் செய்தனர்.

பிப்ரவரி 5ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அந்த இடத்திற்குச் சென்றபோது, கிட்டத்தட்ட 20 மீட்டர் அருகில் இருந்த பேருந்து நிறுத்துமிடம்வரை துர்நாற்றம் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 6ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மீண்டும் அங்குச் சென்றபோது, இறந்துகிடந்த மீன்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. குளத்தில் உள்ள நீரும் நிரப்பப்பட்டு விட்டது.

குறிப்புச் சொற்கள்