தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்த 10 ஆண்டுகளில் பேருந்துப் பயணத்தின்போது ஐவர் மரணம்

2 mins read
3697aa96-a2ba-4a12-979f-45f1d727a29e
ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளில் நான்கு மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து பேருந்தில் சென்ற பயணிகளில் ஐந்து பேர் மாண்டனர்.

மாண்ட ஐவரில் நால்வர் முதியவர். அவர்கள் பேருந்திற்குள் இருக்கும்போது கீழே விழுந்து மாண்டனர். ஐந்து மரணங்களும் வெவ்வேறு நேரத்தில் நடந்தவை. இந்தத் தகவலைப் போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.  

கடந்த மார்ச் 12ஆம் தேதி மாலை  80 வயது முதியவர் ஒருவர் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்தில் பயணம் செய்போது தாம் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வருவதை அறிந்து எழுந்தார். அவர் கைப்பிடியைப் பிடிப்பதற்குள் நிலை தடுமாறி கீழே விழுந்து மாண்டார்.

“ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளில் நான்கு மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட அனைத்தும் பாதுகாப்பாக நடக்கின்றன. ஒன்று இரண்டு அசம்பாவிதங்கள் நடக்கின்றன. மற்றபடி பெரும்பாலும் பாதுகாப்பான பயணங்களாக உள்ளன,” என்று திரு முரளி பிள்ளை குறிப்பிட்டார். 

பயணிகளின் பாதுகாப்பு குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் நான்கு பொதுப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்களான எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, டவர் டிரான்சிட் சிங்கப்பூர், கோ அஹெட் ஆகியவற்றுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.  

பொதுப் பேருந்துகளில் மூத்தோருக்கு முன்னுரிமை தரும் இருக்கைகள், வழுக்காமல் இருக்கும் தரைகள், கதவுகள் அருகே கைப்பிடிகள் எனப் பல வசதிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார் முரளி பிள்ளை. 

பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் உயரம் குறைக்கும் வசதி இருப்பதை எடுத்துக் கூறிய திரு முரளி பிள்ளை, அந்த வசதி சக்கர நாற்காலி எளிதாகப் பேருந்துக்குள் வரவும் மூத்தோர் சிரமமின்றி உள்ளே வரவும் உதவும் என்றார். 

குறிப்புச் சொற்கள்