சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) பிற்பகல் கனமழை பெய்த நிலையில், கெம்பாங்கானிலும் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் சாலையிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
மேலும் ஐந்து இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்திருந்தது.
எனினும், மாலை 5 மணிவாக்கில் வெள்ளம் வடிந்துவிட்டதாக கழகம் பின்னர் வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
சிங்கப்பூரின் பல இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை கனமழை எதிர்பார்க்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் பிற்பகல் 2.50 மணிக்கு எச்சரித்திருந்தது.
பின்னர் பிற்பகல் 3.40 மணிக்கு அது வெளியிட்ட மற்றொரு தகவலில், மாலை 4.45 மணி வரை கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியிருந்தது.

