தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங் விபத்தில் உணவு விநியோக ஊழியர் மரணம்

1 mins read
f6d3f4ff-014c-4462-9987-7b363b77655d
சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த மோட்டார்சைக்கிள். படம்: ஷின் மின் -

ஹவ்காங்கில் நிகழ்ந்த விபத்தில் உணவு விநியோகிப்பாளர் ஒருவர் மரணமடைந்தார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஹவ்காங் அவென்யூ 8, அவென்யூ 4 சந்திப்பில் இரண்டு வாகனங்களுடன் 41 வயது உணவு விநியோகிப்பாளரின் மோட்டார்சைக்கிளும் விபத்தில் சிக்கியது.

இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 2.50 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை யினர் தெரிவித்தனர். ஷின் மின் சீன நாளிதழில் வெளியான படங்களில் இரண்டு பலபயன்பாடு வாகனங்களின் முன்பக்கம் நசுங்கி இருந்ததைக் காண முடிந்தது.

சாலையின் மற்றொரு பகுதி யில் ஒரு மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.

சாலையில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் கிராப்ஃபுட் பையும் சிதறிக் கிடந்தன.

மயக்கமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியை செங்காங் பொது மருத்துவமனையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சேர்த்தது. ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார்.

இந்தச் சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வரும் வேளையில் இந்த விபத்து வேலையிட மரணமாக வகைப் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.