சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து ஃபுட் ரிபப்ளிக் உணவு பானக் கடை வெளியேறுகிறது. அதன் கடைசி கடை ஜூன் 15ஆம் தேதி மூடப்படுகிறது.
மூடப்படும் கடை ஓரியன்டல் பிளாசாவில் உள்ளது. கடையை மூடுவது குறித்த அறிவிப்புகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டு அக்கடைத் தொகுதியில் ஃபுட் ரிபப்ளிக் திறக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபுட் ரிபப்ளிக் தற்போது அங்கிருந்து வெளியேறுகிறது.
சிங்கப்பூர் நிறுவனமான ‘பிரெட்டாக்’கின்கீழ் ஃபுட் ரிபப்ளிக் உணவு பானக் கடை செயல்படுகிறது.
கடை மூடல் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ‘பிரெட்டால்க்’கிடம் பேசியது. “கடைக்கான ஒப்பந்தம் முடிவடைவதால் கடையை மூடுகிறோம்,” என்று அது தெரிவித்தது.
சீனாவில் தற்போது 20 ஃபுட் ரிபப்ளிக் உணவு பானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஷாங்காய், சென்ஷென் வட்டாரங்களில் அவை கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் தைவான், ஹாங்காங்கிலும் கவனம் செலுத்தவுள்ளதாக ‘பிரெட்டாக்’ கூறியது.
2016ஆம் ஆண்டு சீனாவில் 40 ஃபுட் ரிபப்ளிக் உணவு பானக் கடைகள் இருந்தன. பின்னர் அவை படிப்படியாக மூடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் 14 இடங்களில் ஃபுட் ரிபப்ளிக் உணவு பானக் கடைகள் உள்ளன. மலேசியாவிலும் அது செயல்படுகிறது.

