சுவையூட்டிகள் சிலவற்றில் பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவற்றை விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ள சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
கேப் ஹெர்ப் அண்ட் ஸ்பைஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் பொருள்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று அமைப்பு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சுவையூட்டிகளின் விவரம்:
பிளாஸ்டிக் பொருள் கலந்திருக்கலாம் என்ற விவகாரம் குறித்து இந்தச் சுவையூட்டிகளை இறக்குமதி செய்யும் ‘கியூ.பி. டிரேடிங்’ நிறுவனம், சிங்கப்பூர் உணவு அமைப்பிற்குத் தகவல் அளித்தது.
அதையடுத்து அவற்றை விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் விற்பனைச் சட்டத்தின்கீழ், உட்கொள்ளப் பாதுகாப்பற்றவையாகக் கருதப்படும் உணவுப் பொருள்களை விற்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட சுவையூட்டிகளை வாங்கியோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உட்கொண்டவர்கள் உடல்நலம் குறித்த கவலை எழுந்தால் மருத்துவ உதவி நாடும்படி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் இப்பொருள்களை வாங்கிய கடைகளை நாடலாம்.