குறைந்த வருமானம் ஈட்டும் மூத்தோருக்கு உதவும் நோக்கில் ‘சிக்லாப் பிளேட் இட் ஃபார்வர்ட்’ என்னும் உதவித் திட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
நிதிச் சுமையால் தடுமாறும் மூத்தோர், ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளைச் சாப்பிட இந்தத் திட்டம் உதவும்.
மூத்தோருக்கு மாதந்தோறும் உணவு மானியத்துடன் கூடிய $10 பற்றுச்சீட்டு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும். இத்திட்டம் இவ்வாண்டு இறுதிவரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஜி60 கொண்டாட்டத்தின் கீழ் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகளில் இது ஓர் அங்கமாக உள்ளது.
நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் நிதி இத்திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
பிரதமர் அலுவலக அமைச்சரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் ஆலோசகருமான முகம்மது மாலிக்கி ஒஸ்மான் ‘சிக்லாப் பிளேட் இட் ஃபார்வர்ட்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சிரமப்படும் முன்னோடித் தலைமுறையினருக்கு சமூகமாக இணைந்து உதவுவது முக்கியமான ஒன்று அவர் தெரிவித்தார்.
உணவு மானியம் பெற விரும்பும் மூத்தோர் சிக்லாப் சமூக மன்றத்தில் விவரங்களைக் கேட்டுப் பெறலாம். தகுதிபெறும் மூத்தோருக்குப் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை (ஜனவரி 6) மாலை வரை $4,600க்குமேல் நன்கொடையாகக் கிடைத்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

