கதறி அழுத வெளிநாட்டு ஆடவர்; பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

கதறி அழுத வெளிநாட்டு ஆடவர்; பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

1 mins read
0f15de4c-98d1-454d-94d5-54ea827b6bd5
கமல் பொதுமக்களுக்கு ஆபத்தானவர் என்று அரசாங்கத் தரப்பு பிணை வழங்க மறுப்பு தெரிவித்தது. அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எகிப்து நாட்டைச் சேர்ந்த 44 வயது சமே முகம்மது கமல் ஃபார்க் சிங்கப்பூரில் சிலரை மானபங்கப்படுத்திய சந்தேகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கமல் தமக்குப் பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கதறி அழுதார். தாம் இதுபோன்ற தவற்றை சிங்கப்பூரில் செய்வது இதுவே முதல்முறை என்றும் கூறினார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.

கமல், மரினா பே வட்டாரத்தில் மே 12ஆம் தேதி 29 வயது பெண் ஒருவரையும் ஆகஸ்ட் 9ஆம் தேதி 23 வயது பெண் ஒருவரையும் மானபங்கம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதன் பின்னர் கமலுக்கு பிணை வழங்கப்பட்டது. இருப்பினும் ஆடவர் பிணையில் இருந்தபோது மானபங்க செயல்களைத் தொடர்ந்தார். அதனால் அவர் பிணை ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கமல்மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளன.

இந்நிலையில் புதன்கிழமையன்று கமல் தமக்கு பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார். கமல் பொதுமக்களுக்கு ஆபத்தானவர் என்று அரசாங்கத் தரப்பு பிணை வழங்க மறுப்பு தெரிவித்தது. அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்