தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வெளிநாட்டு ஊழியருக்குச் சிறை

1 mins read
a8f99d95-1e81-49bc-a8d2-5a691847af09
துவாஸ் வெஸ்ட் நிலையம் அருகே இரு பங்ளாதே‌ஷ் ஊழியர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுபோதையில் இருந்த பெண்ணை துவாஸ் அருகே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பங்ளாதே‌ஷ் ஊழியருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 9 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மார்ச் 8ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கும் 2.20 மணிக்கும் இடையில் நடந்தது.

அலம் போய்சல் (38), அகம்மது ரேகஹான் (32) ஆகிய இரண்டு பங்களாதே‌ஷ் ஊழியர்களும் 2022ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இரவு சைனீஸ் கார்டன் ரயில் நிலையத்தில் ரயில் ஏறினார்.

அப்போது மதுபோதையில் தடுமாறிக்கொண்டிருந்த 32 வயது பெண்ணை அவர்கள் கண்டனர். நள்ளிரவுக்குப் பின் 12.30 மணி வாக்கில் ரயில் துவாஸ் வெஸ்ட் நிலையத்தில் நின்றது.

அதன் பின்னர் அந்த இரு ஆடவர்களும் அப்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

போய்சல் அப்பெண்ணை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பின்னர் ரேகஹான் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தார். பிறகு அவர் அப்பெண்ணை மானபங்கம் செய்தார்.

குற்ற நடவடிக்கைக்குப் பின் இருவரும் டாக்சி எடுத்து அவர்கள் தங்குமிடத்திற்குத் தப்பியோடினர்.

அன்று காலை 7.10 மணி வாக்கில் சைக்கிளோட்டி ஒருவரால் அடையாளம் காணப்பட்டார் அப்பெண். அதன் பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அன்று இரவே இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

போய்சல் மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்