வெளிநாட்டினர் இருவர் ஜோடி சேர்ந்து மூவரை ஏமாற்றி, கிட்டத்தட்ட $263,000 பணத்தைப் பறித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
முதலீட்டு வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று வேலையில் இந்த ஜோடி ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த 33 வயது வாங் ருவிமீதும் மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 37 வயது சாவ் யங் செங்மீதும் தலா மூன்று மோசடி குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 15) சுமத்தப்பட்டன.
இவ்வாண்டு ஜூன் மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ‘வாட்ஸ்அப்’ பில் வெளியான இணைய வேலை வாய்ப்பு குறித்த மோசடி விளம்பரத்தை உண்மை என நம்பிய பாதிக்கப்பட்ட ஒருவர் ஏமாற்றப்பட்டார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலில் இவ்விருவரும் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் ஏழு பேரின் வங்கிக் கணக்கில் மொத்தமாக $28,000க்கு மேல் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதே பாணியில் முதலீட்டு வாய்ப்புகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி வேறு ஒருவரை இவ்வாண்டு ஜூன் மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏமாற்றி, அவரிடமிருந்து மொத்தமாக $232,000க்கு மேல் இந்த ஜோடி சுருட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மூன்றாவது நபரிடமிருந்து 2,600 வெள்ளியை ஏமாற்றி பறித்துள்ளது வாங் சாவ் ஜோடி.
தொடர்புடைய செய்திகள்
இவர்களின் வழக்கு விசாரணை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டது.

