பள்ளி மாணவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்ட ஆயுதப்படை முன்னாள் கேப்டனுக்கு 17 மாதச் சிறை

பள்ளி மாணவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்ட ஆயுதப்படை முன்னாள் கேப்டனுக்கு 17 மாதச் சிறை

படம்: ‌ஷின் மின்

20 Oct 2026 - 6:53 pm

1 mins read

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த முன்னாள் கேப்டனுக்கு 15 வயதுப் பள்ளி மாணவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 17 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

41 வயது சாவ் சியா ஜுன், 16 வயதுக்குட்பட்ட சிறுவனுடன் தகாத பாலியல் உறவில் ஈடுபட்ட இரு குற்றச்சாட்டுகளையும் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான பொருள்களைத் தயாரித்த குற்றச்சாட்டையும் சாவ் ஒப்புக்கொண்டார்.

சாவ் சியா ஜுனின் முன்னாள் கூட்டாளியும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இன்னொருவருமான 26 வயது ஓவன் டோ வெய் சாங்கிற்கு சென்ற மாதம் 22ஆம் தேதி ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அந்தப் பள்ளி மாணவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூரில் உள்ள ஓரினச்சேர்க்கை ஆண்களுக்கான இணையத்தளம் ஒன்றை 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பார்த்த அந்தச் சிறுவன், அதில் டோவின் தனிப்பட்ட விவரங்களைக் கண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஜூனில் சிறுவனைச் சந்திப்பதற்குத் டோ ஏற்பாடு செய்தார். அவர்களுடன் சாவும் சேர்ந்துகொண்டார்.

வாகன நிறுத்துமிடத்தில் மூவரும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சாவ் அதைத் தன் தொலைபேசியில் படம்பிடித்தார். பின்னர், ஜூன் 5ஆம் தேதி வணிக வளாகத்தின் கழிப்பறையிலும் தோவும் சிறுவனும் பாலியல் உறவு கொண்டனர்.

சிறுவன் சாவிடமிருந்து பெற்ற பரிசுகளால் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். பின்னர் அவர்கள் விசாரித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்