தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரின் பரேட்டில் மக்களைச் சந்தித்த லாப நோக்கமற்ற அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி

1 mins read
b6d57cbf-34f0-42c5-9f9a-52c2db36aaf3
மரின் பரேட் வட்டாரத்தில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்குடன் புதுமுகம் திருவாட்டி ஹஸ்லினா மக்களைச் சந்தித்தார். - படம்: சாவ்பாவ்

புதிய மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் ஆளும் மக்கள் செயல் கட்சியைத் திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம் பிரதிநிதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மேக்-அ-வி‌ஷ் சிங்கப்பூர்’ (Make-A-Wish Singapore) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியான திருவாட்டி ஹஸ்லினா மரின் பரேட் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குடியிருப்பாளர்களைச் (மார்ச் 22) சந்திக்கச் சென்றார்.

புளோக் 50A மரின் டெரஸ் மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்களிடமும் அங்குவந்த குடியிருப்பாளர்களிடமும் மனிதவள அமைச்சர் டான் சி லெங் திருவாட்டி ஹஸ்லினாவை அறிமுகப்படுத்தினார்.

மீடியகார்ப்பில் செய்தியாளராகத் தமது பணியைத் தொடங்கிய 40 வயது திருவாட்டி ஹஸ்லினா, 2020ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

தற்போது அவர் மெண்டாக்கியின் இயக்குநராகவும் இன்னும் பல பொறுப்புகளையும் வகித்துவருகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி ஹஸ்லினா, சமூகத்துக்குக் கடந்த ஆண்டுகளில் ஆற்றிய சேவையின் மூலம் சிங்கப்பூரர்களுக்கு எப்படி உதவுவது என்பதுபற்றி புரிந்துகொண்டதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்