சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: கிறிஸ்தவ போதகருக்கு மூவாண்டு சிறைத்தண்டனை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: கிறிஸ்தவ போதகருக்கு மூவாண்டு சிறைத்தண்டனை

1 mins read
2424ba96-6146-4b3d-a747-4eb21a9ed047
பதவியைப் பயன்படுத்தி அந்தச் சிறுமியைக் குற்றவாளி நம்பிக்கை மோசடி செய்ததாக நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. - படம்: பிக்சாபே

கடுமையான மொழித் திறன் குறைபாடு உள்ள சிறுமியைப் பாலியல் ரீதியில் துன்புறுத்திய முன்னாள் கிறிஸ்துவ போதகருக்குப் புதன்கிழமையன்று (மே 6) மூவாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியை அவர், பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, குற்றவாளியின் விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

அந்த 72 வயது ஆடவர், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டைக் கடந்த ஏப்ரலில் ஒப்புக்கொண்டார்.

தண்டனை வழங்கியபோது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த வேறு இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

தனது பதவியைப் பயன்படுத்தி அந்தச் சிறுமியைக் குற்றவாளி நம்பிக்கை மோசடி செய்ததாக நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.

மேலும், அச்சிறுமி வழிபாட்டிற்காகச் சென்ற தேவாலயத்தில் குற்றவாளி சமய போதகராக இருந்தார் என்பதையும் நீதிபதி குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொழி சார்ந்த புரிதலில் குறைபாடு இருந்தபோதிலும், அவருக்கு எவ்வித அறிவுசார் குறைபாடும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்