முன்னாள் ஐபிபி நிறுவன இயக்குநர் கோ ஜின் ஹியன் மேல்முறையீட்டில் வெற்றி

முன்னாள் ஐபிபி நிறுவன இயக்குநர் கோ ஜின் ஹியன் மேல்முறையீட்டில் வெற்றி

1 mins read
9cb5b071-6775-4151-a7e2-96792d14d61a
ஐபிபி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜோ ஜின் ஹியன் நிறுவனத்துக்கு எந்த இழப்பீடும் வழங்க அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. - படம்: ‌ஷின் மின்

இன்டர் - பசிபிக் பெட்ரோலியம் (ஐபிபி) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கோ ஜின் ஹியன், நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பிற்கு வட்டியுடன் கூடிய $187.9 மில்லியன் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த தேவையில்லை என்று உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டாக்டர் கோ தமது சரக்கு வர்த்தகத்தில் கவனக்குறைவாக நடந்துகொண்டதால் கண்காணிப்புக் கடமையை மீறிவிட்டதை ஒப்புக்கொள்வதாகக் கூறிய பிரிவு, அதன் விளைவாகத்தான் தனக்கு நட்டம் ஏற்பட்டதை ஐபிபி நிறுவனம் நிரூபிக்க தவறியுள்ளதாகக் குறிப்பிட்டது.

முன்னாள் பிரதமர் கோ சொக் தோங்கின் மகனான திரு கோ ஐபிபி நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை இயக்குநராகப் பணியாற்றினார்.

எச்சரிக்கை அல்லது அறிகுறிகள் இருந்தால் ஒழிய மோசடி தொடர்பான விவகாரங்களைக் கண்காணிப்பது இயக்குநரின் பணி அல்ல என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

ஒரு இயக்குநர் லேசாக சருக்கினால், குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு முழுதையும் இயக்குநர்மீது சுமத்திவிட முடியாது. இயக்குநர் கடமையை சரிவர செய்யத் தவறியிருந்தால் அதனால்தான் நட்டம் ஏற்பட்டது என்பதை நிறுவனம் நிரூபிக்கவேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

டாக்டர் கோவின் நடத்தை ஐபிபி நிறுவனத்துக்குத் தவிர்க்க முடியாத நட்டத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் நிரபராதி என்பதை நம்புகிறது என்றும் டாக்டர் கோ தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

டாக்டர் கோ தமது இயக்குநருக்கான கடமைகளை மீறவில்லை என்றும் அடையாளம் காணப்பட்டதாகத் தீர்ப்பு சொன்னது.

குறிப்புச் சொற்கள்