வேண்டுமென்றே 20 மாதப் பிள்ளையை நான்கு முறை தடுமாறச் செய்த முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியருக்குத் திங்கட்கிழமை (ஜுலை 28) ஒன்பது மாதங்கள் இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இரு பிள்ளைகளுக்குத் தாயான 34 வயது சயீதா கமாருதீன், பாதிக்கப்பட்ட பிள்ளையைத் தடுமாறச் செய்தபோது பிள்ளை கீழே விழுந்ததாகவும் அதனால் பிள்ளையின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் கூறப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட வேண்டுமென்றே பிள்ளையைத் துன்புறுத்திய குற்றச்சாட்டை அவர் ஜூன் மாதம் ஒப்புகொண்டார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு பாலர் பள்ளியின் பெயரை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
2023ஆம்ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, 20 மாதப் பிள்ளையாக இருந்த பாதிக்கப்பட்டவரை சயீதா பள்ளியின் கழிவறைக்கு அழைத்து சென்றார். அங்கு தமது கால்களால் நான்கு முறை பிள்ளையைத் தடுமாறச் செய்தார்.
இதனால், பிள்ளைக்குக் காயங்கள் ஏற்பட்டன.
சயீதாவின் அச்செயல்கள் பாலர் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவாகின.
காயங்கள் காரணமாகப் பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்துசென்ற பெற்றோர் அது குறித்து காவல்துறைக்குப் புகார் அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சயீதா கைது செய்யப்பட்டார்.