முகம்மது ஹஃபீஸ் யூசுப் என்னும் 28 வயது ஆடவர் , 2 சிராங்கூன் நார்த் அவென்யூ 2 இல் உள்ள அல்- இஸ்டிகமா பள்ளிவாசலில் ‘சகத்’ நன்கொடை வசூலிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழிபாட்டிற்கு வந்த ஒருவர் பள்ளிவாசலில் உள்ள நன்கொடை அலுவலகத்தில் ரொக்கமாக 5,100 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளார்.
அப்போது ஹஃபீஸ் 100 வெள்ளிக்கு மட்டும் கணக்கிட்டு ரசீது வழங்கியுள்ளார். மீதமுள்ள 5,000 வெள்ளியை அவர் திருடினார். இதுபோன்று பல நேரங்களில் நன்கொடை பணத்தை ஹஃபீஸ் திருடியுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி கணக்குகளை சரிபார்க்கும் போது ஆறு நன்கொடைகளில் தவறு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில் ஏழை எளிய மக்களுக்காக வசூலிக்கப்படும் நன்கொடை பணத்தில் ஹஃபீஸ் 13,514 வெள்ளி திருடியது நிரூபணமானது. அதைத்தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆடவர் தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். அவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.