‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழா 2024’: திறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கு

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழா 2024’: திறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கு

2 mins read
99534e7f-2108-4a97-85e2-8995efad6b77
கருத்தரங்கு, பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெறும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கு ஒன்றில், முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளலாம்.

கருத்தரங்கு ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இடம்பெறுவுள்ளது, “ரெகக்னைசிங் ஸ்கில்ஸ், பில்டிங் கரியர்ஸ்’ எனும் அந்த ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கருத்தரங்கு.

ஊழியர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தக்கூடிய திறன்களை அங்கீகரித்து, சான்றளிக்க நிறுவனங்களும் தொழில்துறைகளும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை கருத்தரங்கில் கலந்துகொள்வோர் தெரிந்துகொள்ளலாம்.

‘தி பிஸ்னஸ் டைம்ஸ்’உடன் இணைந்து ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ ஏற்பாடு செய்துள்ள அந்தக் கருத்தரங்கு பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தொடக்க உரையை ஆற்றுவார்.

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழா’வில் நிறுவனங்கள், ஊழியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு நேரடி, இணைய, இரண்டும் கலந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அவற்றில் இரண்டு சாலைக்காட்சிகள் இடம்பெறவுள்ளன. ஒன்று ஜூலை 11 முதல் ஜூலை 14 வரையும், மற்றொன்று ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 18 முதல் நடைபெறும்.

வளர்ச்சித் துறைகளுக்குத் தேவைப்படும் திறன்கள், வேலைகள், வாழ்க்கைத் தொழில், பயிற்சி வாய்ப்புகள், ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி அவற்றில் கலந்துகொள்வோர் கற்றுக்கொள்ளலாம்.

தேசிய நூலக வாரியத்தின் நூலகங்களில் நடைபெறும் ‘த்ரைவ் அட் லைப்ரரிஸ்’ நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் செல்லலாம். தனிநபர் மேம்பாடு, நிபுணத்துவ வளர்ச்சி போன்றவற்றைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

மேல் விவரங்கள் அறிந்துகொள்ள, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழா’ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்