நான்கு இளையரைக் காணவில்லை என மூன்று நாள்களில் புகார்கள்

நான்கு இளையரைக் காணவில்லை என மூன்று நாள்களில் புகார்கள்

படம்: சிங்கப்பூர் காவல்துறை

03 Oct 2026 - 6:40 pm

2 mins read

சிங்கப்பூரில் சாஜித் ரஹ்மான் என்ற 16 வயது இளையரைக் காணவில்லை.

அவர் காணாமல்போனதாகக் காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து, அவர் இருக்கும் இடம் தெரிந்தால் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) மதியம் 1.55 மணியளவில் எண் 16 ஜாலான் டென்டெராம் அருகே அந்த இளையர் கடைசியாகக் காணப்பட்டதாக அக்டோபர் 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டது.

அவர் நீல நிற டீ-சட்டை அணிந்திருந்தார்.

கடந்த மூன்று நாள்களில் நான்கு இளையர்களைக் காணவில்லை எனப் புகாரளிக்கப்பட்டது. அவர்களில் சாஜித்தும் ஒருவன்.

பூன் கெங்கில் உள்ள 1 செயின்ட் வில்ஃப்ரெட் சாலை அருகே செப்டம்பர் 25 அன்று கடைசியாகக் காணப்பட்ட 14 வயது டியானி சேனல் மேக்லியோ என்ற இளம் பெண் பற்றிய தகவல்களைத் தருமாறும் அக்டோபர் 2ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது.

செப்டம்பர் 29 அன்று புவாங்கோக் கிரசென்ட் புளோக் 997C அருகே கடைசியாகக் காணப்பட்ட ஆரியானா கைரீன், 12, செப்டம்பர் 24 அன்று பாசிர் ரிஸ் ரைஸ் புளோக் 3 அருகே கடைசியாகக் காணப்பட்ட ஜேமீஸ் ஓ ஹுய் மின், 15 ஆகிய இரு இளம் பெண்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு காவல்துறை அக்டோபர் 1ஆம் தேதியன்று கூறியிருந்தது.

காணாமல்போனவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையின் 1800-255-0000 என்ற அவசர உதவி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையத்தளம் வழியாகத் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்