சிலேத்தார் விரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) நிகழ்ந்த விபத்தில் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நான்கு கார்களும் ஒரு டிரக்கும் மோதியதில் விபத்து நிகழ்ந்தது.
முப்பது வயது பயணி உட்பட 39, 30 வயதுகளில் இருந்த இரண்டு ஆண் வாகனமோட்டிகள் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நாற்பது வயதில் உள்ள டிரக் ஓட்டுநர் காவல்துறையின் விசாரணையில் உதவி வருகிறார்.
கறுப்பு நிறக் கார் சென்ற தடத்தில் டிரக் வாகனம் நுழைவதுபோல ஒரு வாகனத்தில் பதிவானக் காட்சிகள் காட்டுகின்றன.
அதன் பிறகு கறுப்பு நிறக் கார் விரைவுச் சாலையில் வழுக்கிச் செல்கிறது. அப்போது அது மற்ற வாகனங்கள்மீது மோதுகிறது.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

