சுடச் சுடச் செய்திகள்

நான்கு பிரபல ஈரச்சந்தைகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

இங்குள்ள நான்கு பிரபலமான ஈரச்சந்தைகளில் வாரநாட்களன்று மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதை அடுத்து இவ்விடங்களுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.

கேலாங் சிராய் சந்தை, புளோக் 104/105 ஈசூன் ரிங் ரோட்டில் அமைந்துள்ள சோங் பாங் சந்தை, புளோக் 20/21 மார்சிலிங் லேனில் உள்ள சந்தை, புளோக் 505 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52ல் அமைந்துள்ள சந்தை ஆகியவை அந்நான்கு ஈரச்சந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டது.

அடையாள அட்டை இறுதி இலக்கு எண் கொண்டு சந்தைக்குள் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கை வாரநாட்களில் இனி இருக்காது என்று வாரியத்தின் சுற்றறிக்கை கூறியது.

இருப்பினும் வார இறுதி நாட்களில் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடு இருக்கும். அத்துடன் ‘சேஃப்எண்ட்ரி’ எனப்படும் பாதுகாப்பு வருகைப் பதிவுமுறையும் மக்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளியும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon