வேலை அனுமதிச்சீட்டு விண்ணப்பத்தில் மோசடி; 10 பேர் கைது

வேலை அனுமதிச்சீட்டு விண்ணப்பத்தில் மோசடி; 10 பேர் கைது

1 mins read
8b95d58b-03c3-43a4-bcb5-ddb2a222b3ea
ஐந்து கட்டுமான நிறுவனங்களின் இயக்குநர்களும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டோரில் அடங்குவதாக மனிதவள அமைச்சு கூறியது. - படம்: மனிதவள அமைச்சு

சிங்கப்பூரில் வேலை அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பத்தில் மோசடி செய்தது தொடர்பாக பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச 31) தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டதாக மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஐந்து கட்டுமான நிறுவனங்களின் இயக்குநர்களும் ஊழியர்களும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அடங்குவர் என்று அமைச்சு கூறியது. சட்டவிரோத ஏற்பாடுகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 41 பேர் விசாரணையில் உதவி வருகின்றனர்.

இது தவிர, ஐந்து நிறுவனங்கள் தொடர்புடைய 40க்கும் மேற்பட்டோரின் மத்திய சேமநிதிப் பங்களிப்பு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, வேலையில் இல்லாத சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மத்திய சேம நிதிச் சந்தா செலுத்தப்பட்டதன் தொடர்பிலான விசாரணை அது என்றது அமைச்சு.

குறிப்புச் சொற்கள்