நாள் ஒன்றுக்கு 1,000 ரிங்கிட் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, வாட்ஸ்அப் கணக்குகளுக்கு போலித் தகவல்களை அனுப்பிய 28 வயது மலேசிய ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் நவம்பர் 18 வரையிலான காலகட்டத்தில், தனது காரின் பின்பகுதியில் ஒரு சாதனம், ஆன்டெனாக்கள் மற்றும் பல்வேறு மின்கலன் தொகுப்புகளைப் பொருத்திக்கொண்டு, சிங்கப்பூரின் பல இடங்களிலும் அவர் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை வாகனம் ஓட்டினார்.
அப்போது அவர் பயன்படுத்திய ‘எஸ்எம்எஸ் பிளாஸ்டர்’ சாதனத்தின் வரம்பிற்குள் 31,000க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் வந்தன. அதில் ஒருவர் மூன்றாம் தரப்பினரின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்து, $1,800க்கும் அதிகமான தொகையை இழந்தார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 14), ஓங் காக் செங் என்னும் அந்த ஆடவருக்கு ஓராண்டு, ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனையும் $1,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அவர், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு வாரம் சிறையில் இருக்க வேண்டும்.

