எரிபொருள் விலை இறங்குமுகம்

1 mins read
a5512d03-b76d-4d30-a04a-9b043eecb534
உலகப் பொருளியல் மேலும் மந்தமாகக்கூடும் என்ற அச்சத்தில், எண்ணெய் விலைகள் மேலும் இறக்கம் கண்டுள்ளன.  - கோப்புப் படம்:

கால்டெக்ஸ் நிறுவனத்தைத் தவிர, எரிபொருள் நிறுவனங்கள் மீண்டும் விலைகளைக் குறைத்துள்ளன.

எரிபொருள் விலையைக் குறைத்த முதல் நிறுவனம் எஸ்ஸோ.

சென்ற வாரத்தின் விலை குறைப்பைத் தொடர்ந்து, அண்மைய இறக்கம் வந்துள்ளது.

உலகப் பொருளியல் மேலும் மந்தமாகக்கூடும் என்ற அச்சத்தில், எண்ணெய் விலைகள் மேலும் இறக்கம் கண்டுள்ளன.

இங்குள்ள பெட்ரோல் நிலையங்களில், டீசல் விலை ஐந்து காசு வரை இறங்கியது. பெட்ரொல் விலை மூன்று காசு வரை குறைந்தது.

எஸ்ஸோ, சினொபெக், எஸ்பிசி, ஷெல் ஆகிய நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளன. திங்கட்கிழமை நிலவரப்படி, கால்டெக்ஸ் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் எரிபொருள் விலைக் கண்காணிப்பு இணையத்தளமான ‘ஃபூயல் காக்கி’யில் தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை சினொபெக்கில் $2.64 என்றும் கால்டெக்சில் $2.70 என்றும் பதிவாகியுள்ளது.

92-ஆக்டேன் ரக பெட்ரோல் விலை எஸ்ஸோவில் $2.79 என்றும் கால்டெக்சிலும் எஸ்பிசியிலும் $2.82 என்றும் பதிவானது.

பிரபலமான 95-ஆக்டேன் ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு $2.84லிருந்து $2.87 வரை உள்ளது.

98-ஆக்டேன் ரக பெட்ரோல் விலை, லிட்டருக்கு $3.31லிருந்து $3.34 வரை உள்ளது.

குறிப்புச் சொற்கள்