தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலின் முழு சேவை

1 mins read
4d2cebdb-d81a-4b52-a291-eadd7e3708a0
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை டிசம்பர் 30ஆம் தேதி முதல் அதன் இரு வழிகளிலும் முழு சேவையை மீண்டும் வழங்கவுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பஞ்சாங் இலகு ரயில் சேவை டிசம்பர் 30ஆம் தேதி முதல் அதன் இரு பக்கங்களிலும் முழு சேவையை மீண்டும் வழங்கவுள்ளது.

இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 16) ஃபேஸ்புக் பக்கம் மூலம் தகவல் வெளியிட்டது.

“புக்கிட் பஞ்சாங் இலகு ரயில் சேவையின் புதுப்பித்தல் பணி நன்றாக நடந்து வருகிறது. அதனால் இலகு ரயில் சேவை இரு பக்கமும் இயங்கும்,” என்று அது குறிப்பிட்டது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ‘சர்வீஸ் பி’ என்று அழைக்கப்படும் திட்டம் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையில் தொடங்கப்பட்டது. அது சுவா சூ காங் ரயில் நிலையத்தில் இருந்து பெட்டிர் நிலையம் வழியாக புக்கிட் பாஞ்சாங் செல்லும்.

‘சர்வீஸ் ஏ’ என்று அழைக்கப்படும் திட்டம் சுவா சூ காங் ரயில் நிலையத்தில் இருந்து செஞ்சா நிலையம் வழியாக புக்கிட் பாஞ்சாங் செல்லும். அது வார நாள்களில் உச்ச நேரங்களில் மட்டும் இருக்கும்.

அதன் பின்னர் இரு வழிகளிலும் கட்டங்கட்டமாக சேவைகள் அதிகரிக்கப்பட்டன. இப்போது அது இரு வழிகளிலும் முழுசேவையாக மாறியுள்ளது.

உச்ச நேரம் இல்லாத போது ரயில் சேவையின் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டு முதல் பராமரிப்பு வேலையும் நடந்தன. 

குறிப்புச் சொற்கள்