செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பின் எதிர்காலமும்: ஆராயும் மாநாடு

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பின் எதிர்காலமும்: ஆராயும் மாநாடு

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

25 Sep 2026 - 6:00 am

1 mins read

இவ்வாண்டின் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் மாநாடு, சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலில் மொழிபெயர்ப்பு, மொழிகள் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்புத் துறையைச் சேர்ந்த பல்வேறு பங்காளிகளை ஒன்றிணைக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்கள், கல்வித்துறை, ஊடகம், தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உட்பட பலரும் இம்மாநாட்டில் கலந்துகொள்வர். இவர்கள் தங்களது அனுபவங்கள், கருத்துகள், பார்வைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலில் மொழிபெயர்ப்பின் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடுவர்.

இந்த மாநாடு கிராண்ட் ஹயாட் சிங்கப்பூர் ஹோட்டலில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கான பதிவு காலை 9 மணிக்குத் தொடங்கும்.

‘செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மொழிபெயர்ப்பு’ எனும் கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது மொழிபெயர்ப்புத் துறையை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்து மாநாட்டில் ஆராயப்படும்.

இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் மனிதர்களின் மொழிப் பயன்பாட்டில் வெளிப்படும் தனித்துவமான குரலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படும்.

தேசிய மொழிபெயர்ப்புக் குழுத் தலைவரும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சருமான டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

குறிப்புச் சொற்கள்