வருங்காலப் போக்குவரத்து, ஏஐ வேலைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

வருங்காலப் போக்குவரத்து, ஏஐ வேலைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

2 mins read
5260f37e-56f4-4dfe-9fa7-849a0bc4dc52
வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றம் கூடும்போது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தயார்ப்படுத்துவதற்குத் தேவைப்படும் பயிற்சியை அளிப்பது, அந்தத் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போன்ற விவகாரங்கள் எழுப்பப்படும்.

உறுப்பினர் எழுப்பவிருக்கும் முக்கிய விவகாரங்களில் அவையும் உள்ளன.

அத்துடன், உலகளாவிய போக்குவரத்து மையமாக சிங்கப்பூரின் வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதிசெய்வதற்கான வழிகள் குறித்தும் மன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைப்பர்.

மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி உறுப்பினரான டின் பெய் லிங் முன்வைக்கும் தனிநபர் மசோதா மீது மன்றத்தில் விவாதம் நடைபெறும்போது உறுப்பினர்கள் அதுதொடர்பான கருத்துகளை வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறைக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவராக உள்ள திருவாட்டி டின், உலகளாவிய போக்குவரத்து மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவதில் தமது தீர்மானம் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மசோதா மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கும்

அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்துதல், இயல்பான உள்கட்டமைப்பை மின்னிலக்க உள்கட்டமைப்புடன் ஒன்றிணைத்தல் போன்றை அவை.

“சிங்கப்பூரின் நீண்டகாலப் பொருளியல் போட்டித்தன்மைக்கு தொடர்புத்திறன் ஒரு முக்கியமான வெற்றிக் காரணியாக விளங்குகிறது. அதனால்தான், போக்குவரத்தை ஒரு முக்கிய அம்சமாகக் கருதுகிறோம்,” என்றார் திருவாட்டி டின்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அமைச்சர் பொறுப்பில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினரோ நியமன நாடாளுமன்ற உறுப்பினரோ விவாதத்திற்குரிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்ய தனிநபர் மசோதா அனுமதிக்கிறது.

2025 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசாங்க நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்படும் அப்படிப்பட்ட முதல் மசோதா இது.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மின்னிலக்க உள்கட்டமைப்பு, போக்குவரத்துத் துறையின் புதிய பொறுப்புகளுக்கு ஊழியரணி உருமாறத் தேவைப்படும் பயிற்சி போன்றவற்றில் அரசாங்கம் முதலீடு செய்யும் திட்டங்கள் உள்ளனவா என்று போக்குவரத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர்.

மேலும், எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பிறரும் தனிநபர் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேச உள்ளனர். அவர்களில் ஒருவரான பெங்கோல் குழுத்தொகுதி உறுப்பினர் இயோ வான் லிங், வேலைகள் மற்றும் ஊழியர்கள் பற்றிப் பேசுவார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுநாடாளுமன்றம்மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ்