சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்திற்குச் செல்பவர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டார்வார்ஸ்’ (Star Wars) நூலகத்தைக் காணலாம்.
கண்கவர் வண்ணச் சுவர்கள், மின்னும் திரைகள் ஆகியவை வருகையாளர்களைக் கவரலாம்.
நூல்களை அலமாரிகளிலிருந்து எடுத்து விநியோகம் செய்யும் தானியங்க இயந்திரம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு முதன்முதலாக வெளிவந்த ‘ஸ்டார்வார்ஸ்’ திரைப்படத் தொடரின் அடிப்படையில் அது அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், புத்தகங்களை அலமாரிகளிலிருந்து எடுத்து விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரமே அங்குள்ள அதிசயம்.
அங்கு மனிதப் பணியாளர்கள் இருக்கவேண்டிய அவசியமே இல்லை.
நூலகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக பணியாளர் ஒருவர் வெளியே உள்ள அலமாரிகளில் புத்தகங்களை முறையாக அடுக்கிச் சுத்தம் செய்வார். அதன் பின்னர், நாள் முழுவதும் அவருக்கான தேவையே இருக்காது. பக்கத்து அறையிலுள்ள இயந்திரம், புத்தகங்களை எடுத்து அடுக்கும் வேலையைப் பார்த்துக்கொள்ளும்.
தேசிய நூலக வாரியத்தின் 30ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில், அந்தத் தற்காலிக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘ஸ்கைட்ரெய்ன்’ சேவைக்கு அருகில், ‘ஜூவல்’ விமான நிலையத்தில் அமைந்துள்ள அந்தத் தற்காலிக நூலகம், இவ்வாண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதிமுதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதிவரை செயல்படும்.
‘டிஸ்னி’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அந்தத் தற்காலிக நூலகம், சாங்கி விமானக் குழுமத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது.
2,000க்கும் மேற்பட்ட ‘ஸ்டார்வார்ஸ்’ புத்தகங்கள் அங்குக் கிடைக்கப்பெறும்.
‘ஸ்டார்வார்ஸின்’ கற்றல் மரபைப் போல தேசிய நூலகத்திற்கும் உள்ளதை முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்நூலகம் எடுத்துக்காட்டுவதாக தேசிய நூலக வாரியத்தின் திட்ட மேம்பாட்டு நிர்வாகி லாவண்யா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.