வேட்பு மனுத் தாக்கல் தினத்தன்று எதிர்பாராதவிதமாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் பொங்கோல் குழுத் தொகுதிக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், தாம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுவா சூ காங் குடியிருப்பாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கடைசி நேர முடிவு, தமது ஆதரவுடன் மிகவும் கவனமாகப் பரிசீலித்து எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து துணைப் பிரதமர் கான், சுவா சூ காங்கின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 24) காலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தம்முடன் பணியாற்றிய சுவா சூ காங் குடியிருப்பாளர்கள், தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.