தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரையோரப் பூந்தோட்டத்தில் ‘ஜுராசிக் வோர்ல்டு’

1 mins read
665b5642-5022-4998-b51a-c23790e2d506
மே மாதம் 29ஆம் தேதியிலிருந்து ‘ஜுராசிக் வோர்ல்டு: தி எக்ஸ்பீரியன்ஸ்’ எனும் கண்காட்சியில் டைனோசர் தொடர்பான இருவழித் தொடர்புக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்படும். - படம்: கரையோரப் பூந்தோட்டம்

ஜுராசிக் வோர்ல்டு எனும் ஆங்கில திரைப்படங்களின் ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள் கரையோரப் பூந்தோட்டத்தில் இடம்பெற இருக்கின்றன.

மே மாதம் 29ஆம் தேதியிலிருந்து ஜுராசிக் வோர்ல்டு: தி எக்ஸ்பீரியன்ஸ் எனும் கண்காட்சியில் டைனோசர் தொடர்பான இருவழித் தொடர்புக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்படும்.

கரையோரப் பூந்தோட்டம், டைனோசர் தொடர்பான பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

கிளவுட் ஃபாரஸ்ட்டின் நுழைவாயிலில் 8.5 மீட்டர் உயரமுள்ள பிராசியோரஸ், டைரானோசாரஸ் ரெக்ஸ், டைனோசர் குட்டிகள், தோட்டங்கள் வழியில் உள்ள நடைபாதைகளில் சிறிய வகை காம்சோநேதஸ் வகை டைனோசர்கள் ஆகியவை இடம்பெறும்.

‘எவலூஷன் வாக்’ என்ற அம்சம் வருகையாளர்களுக்குப் புதிய வகை அனுபவத்தைத் தரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதி காலத்தில் இருந்த தாவரங்கள் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

ஜுராசிக் வோர்ல்டு: தி எஸ்க்பீரியன்ஸ் கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகளின் விலை விவரங்கள் மே மாதம் தெரிவிக்கப்படும் என்று கரையோரப் பூந்தோட்டத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கூடுதல் விவரங்களுக்கு jurassicworldexperience.com/sg எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்