தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் கரையோரப் பூந்தோட்டங்கள்

1 mins read
05946526-53f9-4201-98d1-e7f714c8938f
5 நட்சத்திரங்களுக்கு கரையோரப் பூந்தோட்டங்கள் 4.5 நட்சத்திரங்களைப் பெற்றது. 60,000க்கும் மேற்பட்டவர்கள் கரையோரப் பூந்தோட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் சிறு நாடாக இருந்தாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனதை அது கொள்ளையடிக்கத் தவறுவதில்லை.

இதை ஒப்புக்கொள்ளும்விதமாக உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டங்களுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் ‘டிரிப் அட்வைசர்’ இணையத்தளம் அந்த பட்டியலை வெளியிட்டது.

சிறந்த சுற்றுலாத் தலம், ஹோட்டல், உணவகங்கள், கடற்கரைகள், கேளிக்கைப் பூங்கா என பல்வேறு பட்டியல்களை அதன் பயனீட்டாளர்கள் தந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை வெளியிடப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பட்டியலை ‘டிரிப் அட்வைசர்’ வெளியிடுகிறது.

5 நட்சத்திரங்களுக்கு கரையோரப் பூந்தோட்டங்கள் 4.5 நட்சத்திரங்களைப் பெற்றது. 60,000க்கும் மேற்பட்டவர்கள் கரையோரப் பூந்தோட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆர்க்கிட் மலர் தோட்டங்கள், கண்ணாடி மலர்க் கூண்டுகள், நீர்வீழ்ச்சி, ஒளிரும் மரங்கள், உணவகம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய கரையோரப் பூந்தோட்டங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்ததாகக் கருத்து தெரிவித்தனர்.

நியூயார்க்கின் ‘எம்பையர் ஸ்டேட்’ கட்டடம் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடம் பாரிசின் ஐஃபில் கோபுரத்திற்குக் கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்