தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடாமுயற்சியால் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும் மாணவர்கள்

2 mins read
58e23c0a-4afa-44bb-8db4-2aa25d5d81f2
இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை திங்கட்கிழமை (டிசம்பர் 16) பெற்றுக் கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை திங்கட்கிழமை (டிசம்பர் 16) பெற்றுக்கொண்டனர். 

தேர்வு எழு­திய 9,369 வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்விப் பிரிவு (NA) மாண­வர்­களில் 99.5 விழுக்­காட்­டி­ன­ரும் 4,421 வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரிவு (NT) மாண­வர்­களில் 98.3 விழுக்­காட்­டி­ன­ரும் தேர்ச்சி பெற்றுள்­ள­னர். 

வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்விப் பிரி­வி­லி­ருந்து 48 விழுக்­காட்டு மாண­வர்­கள் குறிப்­பிட்ட பாடங்­க­ளுக்கு பொதுக் கல்­விச் சான்­றி­தழ் சாதா­ர­ண நி­லைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு எழு­தி­னர். வழக்கநிலை மற்றும் சாதாரண நிலை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்வி பிரிவு அல்லது உயர்கல்வி வாய்ப்புகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

இதில் வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்விப் பிரி­வி­லி­ருந்து 76.7 விழுக்­காட்டு மாண­வர்­கள் உயர்­நிலை ஐந்திற்குச் செல்ல தகுதிபெற்­றுள்­ள­னர். 

தேர்ச்சி பெற்­ற­வர்­களில் ஜூரோங் உயர்நிலைப்பள்ளி மாணவி கினிஷா நீலமேகமும் ஒரு­வர்.

விடாமுயற்­சி­யா­லும் கடின உழைப்­பா­லும் 2022ஆம் ஆண்டு வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரிவிலிருந்து வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்விப் பிரிவுக்கு மாறினார் கினிஷா.   

தம் வகுப்பில் சக மாணவர்கள் இடையே சிறந்த மனநலன் இருப்பது முக்கியம் என்று கருதும் இவர், ஆரோக்கியமிக்க மனநலன் சார்ந்த சூழலை ஆதரிப்பவராகவும் திகழ்கிறார்.

பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைத் திட்டத்தின் மூலம் கணக்கியல் அல்லது வணிகம் சார்ந்த உயர்கல்வி பயில விரும்புகிறார் கினிஷா.

தாம் மேற்கொள்ளவிருக்கும் கல்வி, எதிர்காலத்தில் சில்லறை வர்த்தகத்தில் மிகப் பயனுள்ளதாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

தேர்ச்சி பெற்ற கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர் சண்முக ரோகன் ரவிந்திரன் ஜோசஃப், பள்ளியின் வெளியே மின்னிலக்க தடயவியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுகிறார். 

தனது பள்ளியில் தேசிய மாணவர் காவல் படையின் ஒரு முக்கிய உறுப்பினராகத் திகழும் ரோகன், வருங்காலத்தில் சிங்கப்பூர் காவல்படையில் புலனாய்வு அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகிறார். 

காவல்துறை மீதான அலாதி ஆர்வத்தால் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சட்டம் மற்றும் மேலாண்மை உயர்கல்வி பயில விரும்புகிறார் ரோகன். 

குறிப்புச் சொற்கள்