சிங்கப்பூரில் வரும் மே 5ஆம் தேதி பள்ளி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லெனியா கழகம், கல்வி அமைச்சின்கீழ் வரும் பாலர்பள்ளிகள் ஆகியவற்றுக்கு மே 5ஆம் தேதி விடுமுறை. மே 6ஆம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு புதன்கிழமை (ஏப்ரல் 16) தெரிவித்தது.
இவ்வாண்டுப் பொதுத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்கும். அதனால் அன்றைய தினம் பொது விடுமுறை நாள் என்று மனிதவள அமைச்சு அறிவித்திருந்தது.
தேர்தலை நடத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே 3 வாக்களிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்.
மே 3ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் கல்வி அமைச்சு மே 5ஆம் தேதியைப் பள்ளி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. எல்லாக் கல்வி அமைச்சு பாலர்பள்ளிகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அன்றைய தினம், பின்னர் எடுத்துக்கொள்ளக்கூடிய ஓய்வு நாளாக (off-in-lieu) இருக்கும்.

