தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றில் இரு பங்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

2 mins read
71f7dc34-7aed-4a4c-97cd-c662decbead9
நேரடிப் போட்டியை எதிர்நோக்கும் கட்சிகள் சில தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை தாமதமாக முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேட்பாளர் நியமன நாளான ஏப்ரல் 23ஆம் தேதிக்கு இன்னும் நான்கு நாள்கள் உள்ள நிலையில், போட்டியிடக்கூடிய 33 தொகுதிகளில் இரு பங்கு தொகுதிகளுக்கு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இதில் மக்கள் செயல் கட்சியே தனது வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வை முதலில் தொடங்கியது. அக்கட்சி ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் போட்டியிடும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதிக்கு தனது வேட்பாளர்களை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இவற்றில் பெரும்பாலும் மேற்குப் பகுதி, மத்தியப் பகுதிகளில் உள்ள 18 தொகுதிகளுக்கு மக்கள் செயல் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், பாட்டாளிக் கட்சி வசம் உள்ள அல்ஜுனிட், செங்காங் குழுத்தொகுதிகள், ஹவ்காங் தனித் தொகுதி போன்றவற்றுக்கும் தனது வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது.

இதற்கு மாறாக, பாட்டாளிக் கட்சி செங்காங் குழுத்தொகுதிக்கு மட்டுமே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் தற்போதைய உறுப்பினர்களான உள்ள ஹி டிங் ரு, ஜேமஸ் லிம், லுவிஸ் சுவா ஆகியோருடன் புதுமுகமான அப்துல் முகைமின் அப்துல் மாலிக் என்பவரும் அடக்கம்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கெபுன் பாரு, மேரிமவுண்ட் தனித் தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எனினும், தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சுவா சூ காங், வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதிகளுக்கு அது தனது வேட்பாளர்களை இன்னமும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மார்சிலிங்-இயூ டீ, செம்பவாங் குழுத்தொகுதி, செம்பவாங் வெஸ்ட், புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதிகளுக்கு தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி, சிங்கப்பூர் ஒற்றுமைக் கட்சி, மக்கள் சீர்திருத்தக் கூட்டணி ஆகிய கட்சிகளும் சில தொகுதிகளுக்கு தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்