மக்கள் செயல் கட்சிக்கு புதிய வேட்பாளர்களாக களம் காணும் இரு புதுமுகங்கள் தோ பாயோவில் ஞாயிறன்று (ஏப்ரல் 13) தொகுதி உலா வருவதைக் காண முடிந்தது.
அதில் ஒருவர் கவல் பால் சிங். இவர் டிட்டோ, ஐசேக் அண்ட் கம்பெனியில் நிர்வாகப் பங்குதாரராக விளங்கும் ஒரு வழக்கறிஞர். மற்றொருவர் அறநிறுவனமான ‘கேம்பஸ்இம்பெக்ட்’ டில்நிர்வாக இயக்குநராகப் பணிபுரிகிறார்.
இவ்விருவரும் போக்குவரத்து அமைச்சரும் அந்தக் குழுத்தொகுதி உறுப்பினருமான சீ ஹொங் டாட்டுடன் சேர்ந்து தோ பாயோ வெஸ்ட் ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் அங்குள்ள குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினர்.
பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், திரு சக்தியாண்டி சுபாத், திரு சோங் கீ ஹியோங் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.