சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மேரிமவுண்ட், கெபுன் பாரு, பைனியர் ஆகிய தனித் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட உள்ளது.
இதைத் தெரிவித்த அந்தக் கட்சித் தலைவர்கள் வேட்பாளர் நியமன நாளில் யார் யார் எங்கு போட்டியிடுவர் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளது.
இதில், அந்தக் கட்சித் தலைவர்கள் பல தொகுதிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) மேற்கொண்டுள்ள தொகுதி உலாவில் வேட்பாளர்களாக அறிமுகம் ஆகக்கூடியவர்கள் அவர்களுடன் வந்ததைக் காண முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீஷானில் தொகுதி உலா மேற்கொண்ட கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் மேரிமவுண்ட் தொகுதியில் தமது கட்சி வேட்பாளர் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
வேட்பு மனுத் தாக்கல் நாளன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வரும் என்று அவர் விளக்கினார். அவருடைய தொகுதி உலாவில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திரு ஜெஃப்ரி கூவும் உடனிருந்தார்.