எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேறும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி

1 mins read
c08c126b-166d-4d75-9f2a-a5d8a08205f9
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமான் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி செம்பவாங் குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டிக்கு அடிபோடுவதைத் தங்களால் ஏற்க முடியாத ஒன்று எனத் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு உருவான எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து தான் விலகப் போவதாக ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி (ரெட் டாட் யுனைடெட்) கட்சி அறிவித்துள்ளது.

அந்தக் கூட்டணியில் உள்ள தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிட்டு மும்முனைப் போட்டிக்கு இடம் கொடுப்பதுதான் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காரணம் என்று அக்கட்சி கூறியது.

அந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சிங்கப்பூர் ஒற்றுமைக் கட்சியும் சிங்கப்பூர் மக்கள் கட்சியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சனிக்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) தனது ஃபேஸ்புக் பதிவில் கூறிய ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி செம்பவாங் குழுத்தொகுதியில் களமிறங்கி அங்கு மும்முனைப் போட்டிக்கு அடிபோடுவதைத் தங்களால் ஏற்க முடியாது எனக் கூறியது.

அவ்வாறு தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி செய்வது, வாக்காளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும், கூட்டணியின் அடிப்படையை தகர்ப்பதாக உள்ளது என்று ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி விளக்கியது.

குறிப்புச் சொற்கள்