தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீ சூன் குழுத் தொகுதி: ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியின் அணி அறிவிப்பு

1 mins read
d7670c20-1a48-4fc5-b73b-d1966036f487
நீ சூன் குழுத்தொகுதியில் களமிறங்கும், ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி அணி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீ சூன் குழுத்தொகுதியில், ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியின் (RDU) வேட்பாளர் அணிக்கு அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமன் தலைமை ஏற்கிறார்.

கட்சித் தலைவர் டேவிட் ஃபூவும் அவருடன் இணைந்துகொள்கிறார்.

மூன்று வேட்பாளர்களை அக்கட்சி ஏற்கெனவே அறிமுகம் செய்தது.

அந்த ஐவரும் நீ சூன் குழுத் தொகுதி வேட்பாளர்கள் என்று அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) அறிவித்தது.

ஈசூன் அவென்யூ 5, புளோக் 701C-யில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திரு ஃபிலமன், 56, டாக்டர் ஃபூ, 60, டாக்டர் சையத் ஆல்வி அஹமத், 57, திரு பாங் ஹெங் சுவான், 56, திருவாட்டி ஷரோன் லின், 40, ஆகியோர் அந்த ஐந்து வேட்பாளர்கள்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி இதே தொகுதியில் 2020 பொதுத் தேர்தலில் மசெகவுக்கு எதிராகக் களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தது.

குறிப்புச் சொற்கள்