மக்களைக் கைவிடமாட்டோம்: சிஜகூ இணையம் வழி பிரசாரம்

1 mins read
41b69e8c-3e0a-47f2-abb1-a34284b97542
இணையப் பிரசாரத்தில் டெஸ்மண்ட் லிம். - படம்: யூடியூப்

பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி குடியிருப்பாளர்களைக் கைவிடமாட்டோம் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் டெஸ்மண்ட் லிம் கூறியுள்ளார்.

அந்தத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி (சிஜகூ) கடந்த இருபது ஆண்டுகளாக அளித்துவரும் கடப்பாடு நீடிக்கும் என்று அந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.

தாங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டால் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க குரல் கொடுக்கப் போவதாக காணொளி வாயிலாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அந்தக் கூட்டணியின் நான்கு பிரசார காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. முதல் இரண்டு காணொளிகளை செவ்வாய்க்கிழமையும் அடுத்த இரண்டை புதன்கிழமையும் அக்கட்சி வெளியிட்டது.

இந்தப் பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி நேரடியாக மக்களைச் சந்திக்கக்கூடிய பிரசாரக் கூட்டங்களை நடத்தவில்லை. அதற்குப் பதில் இணையம் வாயிலாக அது ஆதரவு திரட்டி வருகிறது.

“பாசிர் ரிஸ்-பொங்கோல் தொகுதி தற்போது பாசிர் ரிஸ்-சாங்கி என்று பெயர் மாற்றம் கண்டுள்ளத. இந்தத் தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு மதல் போட்டியிட்டு வருகிறேன். உங்களது விருப்பங்கள் நிறைவேற உங்களுடன் இணைந்து போராட விரும்புகிறேன். ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்று திரு லிம் தமது மாண்டரின் உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பொதுத் தேர்தல் 2025GE2025பாசிர் ரிஸ் - சாங்கி

தொடர்புடைய செய்திகள்