பல ஆண்டுகளாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் சீ சூன் ஜுவான் புக்கிட் பாத்தோக் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், ஆகக் கடைசி தொகுதி எல்லை மறுவரையில் அது நீக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
அந்தப் பிரசாரக் கூட்டத்தில் கட்சி வேட்பாளர்கள் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், திரு சீ, புக்கிட் பாத்தோக் தொகுதியை கைவிட்டுவிட்டு செம்பவாங் வெஸ்ட் தொகுதிக்குச் சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு திரு சீயை தற்காத்துப் பேசினர்.
அந்தத் தொகுதி புதிய ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்ட பின் டாக்டர் சீ, தான் செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடப்போவதாக மார்ச் 11ஆம் தேதி அறிவித்தார்.
“திரு சீ, 10 ஆண்டுகளாக அங்கு கடுமையாகப் பணிபுரிந்து மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிலையில், அவருடைய உழைப்பு அழிக்கப்பட்டுள்ளது,” என்று செம்பவாங் குழுத்தொகுதி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தமான்ஹுரி அபாஸ் கூறினார்.