தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் குழுத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

2 mins read
3bca7e71-e38a-40dd-bb33-f7d77170de8c
மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்தி கட்சி ஆகியன தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிடுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் குழுத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணியை எதிர்த்து மூன்று கட்சிகள் களமிறங்கி உள்ளன.

தெம்பனிஸ் ஸ்திரீட் 71ல் உள்ள போய் சிங் பள்ளியில் மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்தி கட்சி ஆகியன மசெகவுக்கு எதிராகக் களமிறங்கியதாக அறிவிக்கப்பட்டது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃப்லி, 62, தலைமையில் ஆளும் கட்சி அணி களமிறங்கி உள்ளது.

மனிதவளம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன், 53, போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், 54, புதியவர்களான டேவிட் நியோ, 47, செர்லின் சென், 43, ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்று உள்ள பிற வேட்பாளர்கள்.

தொகுதி மாறிய ஃபைஷல் மனாப்

பாட்டாளிக் கட்சி அணியில் ஃபைஷல் மனாப், 49, ஜிம்மி டான், 53, ஓங் லுயே பிங், 48, எய்லீன் சோங், 33, மைக்கல் திங், 37, ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் ஃபைஷல் மனாப் தொகுதி மாறுவதாக மனுத்தாக்கல் தினத்தன்று தெரியவந்தது. 2011ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த திரு ஃபைஷல், அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி வேட்பாளராகப் போட்டியின்று வென்றார்.

இவர்களில் ஃபைஷல் மனாப் தொகுதி மாறுவதாக மனுத்தாக்கல் தினத்தன்று தெரியவந்தது. 2011ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த திரு ஃபைஷல், அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி வேட்பாளராகப் போட்டியின்று வென்றார்.

இந்தத் தேர்தலில் தெம்பனிஸ் குழுத் தொகுதிக்கான பாட்டாளிக் கட்சியின் ஐந்து வேட்பாளர்களில் நால்வர் அண்மையில்தான் அறிவிக்கப்பட்டனர்.

தெம்பனிஸ் குழுத் தொகுதியில் முதல்முறையாக பாட்டாளிக் கட்சி போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் களமிறங்கிய தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி இம்முறையும் போட்டியிடுகிறது.

அந்தக் கட்சியின் வேட்பாளர் அணி: கட்சியின் தலைவர் ரெனோ ஃபோங், 56, துணைத் தலைவர் முஹம்மது ரிட்ஜ்வான் முஹம்மது, 63, உதவித் தலைமைச் செயலாளர் யூஜின் இயோ, 49, நிதித் திட்ட நிர்வாகி ஸீ ஃபே, 32, தமிழ்செல்வன் கருப்பையா, 57.

நான்காவது அணியாகக் களமிறங்கி உள்ள மக்கள் சக்தி கட்சி வேட்பாளர்களாக கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங், 55, கட்சித் தலைவர் டெரிக் சிம், 44, வியர் நேதன், 26, பீட்டர் சோ, 65, அர்பாஹ் ஹாருன், 50, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்