தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுத் தேர்தல்: மரின் பரேட்-பிரேடல் குழுத்தொகுதிக்கு மசெக புதுமுகம்

2 mins read
775f042d-ea92-4a60-9c1d-a97dd71b50d9
யூனோஸ் ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் மசெகவின் மரின் பரேட்-பிரேடல் குழுவுடன் தென்கிழக்கு வட்டார மேயர் முகமது ஃபாஹ்மி அலிமான் (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

யூனோஸ் கிரெசன்ட் ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தொகுதி உலா மேற்கொண்டார். அங்கு அவருடன் வர்த்தக வளர்ச்சி இயக்குநர் என்று அறியப்படும் திருவாட்டி டையனா பாங் என்பவரும் கூட இருந்தார்.

அவரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அறிமுகம் செய்துவைத்த மரின் பரேடு தொகுதி உறுப்பினருமான அமைச்சர், திருவாட்டி பாங் அருகிலிருக்கும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் நீண்டநாள் தொண்டூழியர் என்று விளக்கினார். 

திருவாட்டி டையனாபாங், 51, ஃபெங்ஷான் மகளிர் நிர்வாகக் குழுத் தலைவர், மக்கள் கழக மாதர் ஒருங்கிணைப்பு வட்ட மன்றத்தின் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகிப்பவர் என அமைச்சர் டாக்டர் டான் அவரை அறிமுகம் செய்து வைத்தார். 

திருவாட்டி பாங், ‘வின்’ எனப்படும் மக்கள் கழகத்தின் பெண்கள் ஒருங்கிணைப்புப் கட்டமைப்பின் (Women’s Integration Network (WIN) பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் பராமரிப்பாளர் நட்பு வட்ட திட்டத்தை முன்னெடுத்து நடத்துபவர். அத்துடன், அவர் பலதரப்பட்ட பின்னணியுடைய மாதர்களிடையே சமூக கட்டமைப்பையும், தொண்டூழியத்தையும் வளர்க்க உதவுபவர்.

அவருக்கு கணக்குத் தணிக்கை, வரி, வர்த்தக ஆலோசனை போன்ற துறைகளில் 19 ஆண்டு அனுபவம் உள்ளதாக சிங்கப்பூர் மாதர் சங்க இணையத்தள (SCWO)  தகவல் கூறுகிறது. அவர் சங்கத்தின் இரண்டாம் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். 

அரசியலில் நுழையக் காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த திருவாட்டி பாங், சிங்கப்பூர் குடும்பங்கள் தழைத்தோங்கும் இடமாக விளங்க தான் பங்களிக்க விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், நம்பிக்கை, உறுதி ஆகிய பண்புகளை இதயபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் வளர்க்க முடியும் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் விளக்கினார். 

குறிப்புச் சொற்கள்