புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே 3ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
“உங்களது வலுவான வெற்றிக்கு உளமார்ந்த வாழ்த்துகள்,” என்று தமது எக்ஸ் தளப் பதிவில் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் சிங்கப்பூரும் வலுவான, பன்முகப் பங்காளித்துவத்தைக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இரு நாட்டு மக்களுக்கு இடையிலும் அணுக்கமான உறவுகள் இருப்பதைச் சுட்டினார்.
“தங்களுடன் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி, நமது விரிவான, உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேம்படுத்த விரும்புகிறேன்,” என்று இந்தியப் பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

