சிங்கப்பூரில் நடுவத்தை அமைத்த ஜெர்மானிய வேதி நிறுவனம்

சிங்கப்பூரில் நடுவத்தை அமைத்த ஜெர்மானிய வேதி நிறுவனம்

1 mins read
9af29264-29c9-478c-a842-968b088ac27b
சிங்கப்பூர் துறைமுக ஆணையத்துடன் (பிஎஸ்ஏ) செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) செய்துகொண்ட உடன்படிக்கையின்படி பிஎஸ்ஏவுக்குச் சொந்தமான சொத்துகளை முன்சிங் குழுமம் பயன்படுத்த முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த வேதி நிறுவனமான முன்சிங் குழுமம் அதன் வட்டாரத் தலைமையகத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது.

இந்நடுவம் புதன்கிழமையன்று (ஜனவரி 15) திறக்கப்பட்டது.

முன்சிங் குழுமம், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 40 மில்லியன் யூரோ (S$56.4 மில்லியன்) முதலீடு செய்துள்ளது.

ஜூரோங்கில் உள்ள அனைத்துலக வர்த்தகப் பூங்காவில் அமைந்துள்ள ஜெர்மானிய நிலையத்தில் புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஏற்கெனவே இயங்கி வரும் தனது தயாரிப்பு ஆலைகளுக்கு முன்சிங் சிங்கப்பூர் நிறுவனம் ஆதரவு வழங்கும்.

அத்துடன், பல்வேறு வட்டார விற்பனை அலுவலகங்களுக்கும் அது ஆதரவு வழங்கும்.

கட்டுமானத்துறை போன்றவற்றுக்குத் தேவையான உயர்தர வேதிப்பொருள்களை முன்சிங் நிறுவனம் தயாரிக்கிறது.

சிங்கப்பூரில் புதிய நடுவத்தைத் திறக்க, புவியில் சிங்கப்பூருக்கே உரிய உத்திபூர்வ இடம், உலகிலேயே இரண்டாவது ஆகப் பெரிய துறைமுகத்தைக் கொண்ட நாடு என்ற கௌரவம் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்தன என்று நடுவத்தின் திறப்பு விழாவின்போது முன்சிங் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் முன்சிங் கூறினார்.

சிங்கப்பூர் துறைமுக ஆணையத்துடன் (பிஎஸ்ஏ) செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) செய்துகொண்ட உடன்படிக்கையின்படி பிஎஸ்ஏவுக்குச் சொந்தமான சொத்துகளை முன்சிங் குழுமம் பயன்படுத்த முடியும்.

போக்குவரத்தும் 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சரக்குக் கிடங்கும் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்