ஜெர்மனியைச் சேர்ந்த ‘பயோட்ரானிக்’ எனும் மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனம், சிங்கப்பூரில் தனது புதிய மையத்தைப் பல நூறு மில்லியன் டாலர் செலவில் வெள்ளிக்கிழமை திறந்துள்ளது.
இதய இயக்கக் கருவி, ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் ‘ஸ்டெண்ட்’ கருவி போன்ற மருத்துவச் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமான பயோட்ரானிக், அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
211,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஏழு மாடிக் கட்டடத்தில் தனது புதிய மையத்தை அந்நிறுவனம் திறந்துள்ளது.
புதிய ஆசிய பசிபிக் உற்பத்தி, ஆராய்ச்சி மையமாக அது செயல்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தில் ஒரே கூரையின்கீழ் விற்பனைப் பிரிவு, உயர்சேவைப் பிரிவு, உற்பத்திப் பிரிவு என அனைத்தும் செயல்படவிருக்கின்றன.
அந்நிறுவனத்தின் பரந்த விரிவாக்கத் தொலைநோக்கான ஆராய்ச்சியையும் மேம்பாட்டையும் உள்ளடக்கிய பயிற்சி நிலையமும் அங்கு இயங்கும் என்று பயோட்ரானிக் ஆசிய பசிபிக் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பீட்டர் ஹோரன் கூறினார்.

