தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் முதலீடு செய்யும் ஜிஐசி

1 mins read
4ddb358e-9397-4dd7-8593-2e81ff40b42c
சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குப் பசுமை அமோனியாவின் ஏற்றுமதி 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் எனவும் அது கூறியது. - படம்: அரசாங்க முதலீட்டு நிறுவனம்

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமும் (ஜிஐசி) மலேசிய எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாசும் இணைந்து இந்திய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யவுள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள இடங்களிலிருந்து ஆண்டுக்கு ஐந்து மில்லியன் டன் பசுமை அமோனியாவை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தில் அவ்விரு நிறுவனங்களும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து அவ்விரு நிறுவனமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பெட்ரோனாசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவான ஜென்டாரியும் ஜிஐசியின் இணை நிறுவனமும் இணைந்து இந்தியாவின் எரிசக்தி நிறுவனமான கிரீன்கோ குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஏஎம் கிரீன் நிறுவனத்தின் திட்டத்தில் முதலீடு செய்யவுள்ளதாக அந்த அறிக்கையில் அவ்விரு நிறுவனங்களும் குறிப்பிட்டன.

சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குப் பசுமை அமோனியாவின் ஏற்றுமதி 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் எனவும் அவை கூறின.

குறிப்புச் சொற்கள்