ஆசிய பசிபிக் நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த தேவைப்படும் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.05 பில்லியன்) முதலீட்டை வான்டேஜ் தரவு மையங்கள் நிறுவனம் பெற்றுள்ளது.
மலேசியாவில் தரவு மையம் ஒன்றைக் கொள்முதல் செய்யவும் இந்த முதலீடு உதவும்.
இந்த முதலீட்டுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டுப் பிரிவான ஜிஐசியும் அபு தாபி முதலீட்டு ஆணையத்தின் துணை நிறுவனமும் இணைந்து தலைமை தாங்குகின்றன.
இத்தகவலை வான்டேஜ் நிறுவனம் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்டது.
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள யோன்டர் குழுமத்தில் தரவு மைய வளாகத்தை வாங்க இருப்பதாக வான்டேஜ் நிறுவனம் கூறியது.
அந்த மையம் தென்கிழக்காசியாவிலேயே ஆகப் பெரிய தரவு மையங்களில் ஒன்று.
அது 300க்கும் அதிகமான மெகாவாட்ஸ் கொண்ட தரவு மையம் என்று வான்டேஜ் கூறியது.